உலகளாவிய ஆற்றல் தொழில்நுட்ப முன்னணியாளரான ஸ்னைடர் எலக்ட்ரிக், தென்னிந்தியாவில் 'சர்வீசஸ் எக்ஸ்பிரஸ்' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் தனது நடமாடும் சேவை இன்னோவேஷன் மையத்தை 5 மாநிலங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு 120-க்கும் மேற்பட்ட நாட்களில் கொண்டு செல்லவுள்ளது. பெங்களூருவில் தொடங்கும் இந்த முயற்சியானது, ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சேவை நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பங்களை இப்பகுதியில் உள்ள தொழில் துறை சந்தைகளுக்கு அருகில் கொண்டு சேர்க்கும்.
மேலும், முக்கியமான மின்சார சொத்துகளுக்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த கண்காணிப்பு, சாதனங்களின் செயல்பாட்டு நிலையை அடிப்படையாகக் கொண்ட பராமரிப்பு மற்றும் ஆயுட்கால தீர்வுகள் ஆகியவற்றின் நேரலை செயல்முறை விளக்கங்களையும் வழங்கும்.
பெங்களூருவில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய ஸ்னைடர் எலக்ட்ரிக் இந்தியாவின் சேவைப் பிரிவு துணைத் தலைவர் தாமினி சவுத்ரி, "சர்வீசஸ் எக்ஸ்பிரஸ் என்பது எங்களது சேவைத் திறன்களைத் தொழில்துறைக்கு மிக அருகில் கொண்டு செல்லவும், நிஜ உலக செயல்பாட்டுச் சூழல்களில் அவற்றின் முக்கியத்துவத்தை நிரூபிக்கவும் எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பை வழங்குகிறது. செயல்பாட்டு நிலை சார்ந்த பராமரிப்பு, டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் ஆயுட்கால சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், நிறுவனங்கள் தங்களின் முக்கியமான மின்சார சொத்துகளை எவ்வாறு முன்கூட்டியே நிர்வகிக்கலாம், நம்பிக்கைத் தன்மையை மேம்படுத்தலாம் மற்றும் எதிர்பாராத செயல்பாட்டு முடக்க நேரத்தைக் குறைக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்வதே எங்களது நோக்கமாகும்," என்று கூறினார்.
சர்வீசஸ் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரவு மையங்கள், தொழிற்துறைகள், கட்டிடங்கள், மின் கட்டமைப்புகள் மற்றும் பிற முக்கியப் பிரிவுகளுக்கான தொழில்நுட்பங்கள், தீர்வுகள் மற்றும் நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து, வாடிக்கையாளர்கள் தங்களது மின்சார சொத்துகளை அவற்றின் முழு ஆயுட்காலத்திலும் எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்கலாம், நவீனப்படுத்தலாம் மற்றும் மேம்படுத்தலாம் என்பதை நேரடியாகக் காட்டுகிறது. இதன் நடமாடும் வடிவம், இந்தத் திறன்களைத் தொழில்துறை மையங்களுக்கு நேரடியாகக் கொண்டு சென்று, நிறுவனங்கள் அதன் சேவை நிபுணர்களுடன் கலந்துரையாடவும், தங்களது செயல்பாட்டுச் சூழல்களில் இதன் பயன்பாடுகளை நேரில் ஆராயவும் ஒரு சிறந்த வாய்ப்பை உருவாக்குகிறது.
சாதனப் பதிவு என்பது பயனுள்ள சொத்து மேலாண்மைக்கான முதல் படியாகும். சர்வீசஸ் எக்ஸ்பிரஸ் மூலம், ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனம் முன்கூட்டியே பராமரிப்பு, டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் சாதனங்களின் முழு ஆயுட்காலத்திற்குமான சேவைகளை வழங்கும். இதன் மூலம் சாத்தியமான சிக்கல்களை முன்கூட்டியே கண்டறியவும், திட்டமிடப்படாத செயலிழப்பு நேரத்தைக் குறைக்கவும், சாதனங்களின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் ஆயுட்காலத்தை மேம்படுத்தவும் உதவும்.
சர்வீசஸ் எக்ஸ்பிரஸ் கர்நாடகா, கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 120-க்கும் மேற்பட்ட நாட்களில் 20-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பயணம் செய்து, தென்னிந்தியாவின் முக்கியத் தொழில்துறை சந்தைகளுக்கு ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சேவைத் திறன்களை நேரடியாகக் கொண்டு செல்லும்.
