ரூ.4,200 கோடி மேம்பாட்டு மதிப்பில் துவங்கும் ‘வான்ட்ராக் ரியல் அசெட்ஸ்’ நிறுவனம்


இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத் தளங்களை உருவாக்குவதில் அனுபவம் வாய்ந்த ரியல் எஸ்டேட் நிபுணரான அன்ஷுல் சிங்ஹால், வான்ட்ராக் ரியல் அசெட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Vantrock Real Assets Private Limited - VRAPL) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது, தொடக்கத்தில் கிடங்கு, தொழில்துறை மற்றும் தளவாடப் பூங்காக்களில் கவனம் செலுத்தும், ஒரு செயல்பாட்டாளரால் வழிநடத்தப்படும் ரியல் எஸ்டேட் தளமாகும். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்தத் தளம், சுமார் 11.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடையும்போது, இதன் மொத்த மேம்பாட்டு மதிப்பு (GDV) சுமார் 4,200 கோடி ரூபாயாக (சுமார் 434 மில்லியன் அமெரிக்க டாலர்) இருக்கும்.

ரூ.4,200 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் ரூ.1,100 கோடி (113 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள முதல் 3 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான கட்டுமானங்கள் டெல்லி என்.சி.ஆர்., பெங்களூரு மற்றும் புனே ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். இதற்கான கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்கப்பட்டு, 2028 முதல் வாடகை வருவாய் ஈட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள், ஆவணப் பணிகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் ஆகியவை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதமுள்ள சுமார் 8.5 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான திட்டங்கள், ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பகுதிகளுடன் மும்பை பெருநகரப் பகுதியிலும் (எம்.எம்.ஆர்.) செயல்படுத்தப்படும். இவை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் பல்வேறு கட்டங்களாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

'கிரேட்-ஏ' தரத்திலான கிடங்குகள் மற்றும் தொழிற்பூங்காக்களை அமைப்பதற்கு ஏற்ற, முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உகந்த இடங்களில் இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை தொடங்குகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடையிடையிலான இடங்கள், சுமார் 15-60 ஏக்கர் நிலப்பரப்புகளை கொண்டுள்ளன. மேலும் இவற்றின் வளர்ச்சி சாத்தியக்கூறுகள் 0.4 முதல் 1.5 மில்லியன் சதுர அடி வரை உள்ளது. வான்ட்ராக் நிறுவனத்தின் முதல் உத்தியானது, துறைமுகம் முதல் வீட்டு வாசல் வரையிலான முழுச் சங்கிலியையும் உள்ளடக்கியது: பெரிய கிடங்குகள் மற்றும் தேவைக்கேற்ப கட்டப்படும் கட்டிடங்கள், பல மாடிக் கட்டிடங்கள், இறுதிநிலை விநியோக மையங்கள், டார்க் ஸ்டோர்கள், சுய சேமிப்புக் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட விநியோகச் சங்கிலி, தொழிற்சாலை நிலங்கள், பணியாளர் தங்குமிடங்கள் மற்றும் கலப்பு பயன்பாட்டு கட்டிடங்கள் என, கிடங்குடன் அலுவலகம் மற்றும் சில்லறை விற்பனை தேவைப்படும் இடங்கள் என அனைத்தையும் இது உள்ளடக்கும். இந்நிறுவனம், அடுத்தடுத்த கட்டங்களில், உலகளாவிய திறன் மையங்கள் (GCC’s), புறநகர் அலுவலக வளாகங்கள், அடுக்கு அலுவலகங்கள், தரவு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சொத்துக்கள் உள்ளிட்ட பிற உண்மையான சொத்து வகைகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் அதன் விரிவாக்க திட்டங்களின் ஒரு பகுதியாக அடுத்தடுத்து தனித்தனி உத்திகளாக செயல்படுத்தப்படும். 

” இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நல்ல தொழிற்துறை மற்றும் கிடங்கு வளாகமும் நிரம்பிவிட்டது, மேலும் புதியவை வாடிக்கையாளரின் தொழில்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான தொலைவில் கட்டப்படுகின்றன. நாங்கள் இதற்கு நேர்மாறாக, நிரூபிக்கப்பட்ட வழித்தடங்களுக்குள் மீதமுள்ள இடைநிரப்பு நிலங்களையும், அங்கு ஏற்கனவே உள்ள ’கிரேடு - பி’ கிடங்குகளையும் கையகப்படுத்தி, அவற்றை ’கிரேடு - ஏ’ தரத்திற்கு புதுப்பிக்கிறோம். இந்த இடைநிரப்பு இடங்களை ஒருங்கிணைப்பது மெதுவாகவும் கடினமாகவும் இருந்தாலும், அவை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை தருகின்றன. நாங்கள் ஒருங்கிணைக்கும் பணியை முடித்துவிட்டோம், எங்களின் முதல் 3 மில்லியன் சதுர அடி கட்டுமான பணிகள் 2027-ல் தொடங்குகின்றன” என்று வான்ட்ராக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அன்ஷுல் சிங்கால் தெரிவித்தார்..

” இந்தியாவில் உள்ள பெரும்பாலான கிடங்குகள், அங்கு பணி புரிவது பாதுகாப்பானதா என்று யாராவது கேட்பதற்கு முன்பே கட்டப்பட்டன. இதன் விளைவாக, தீ பாதுகாப்பு, கட்டமைப்பு உறுதித்தன்மை, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் போன்ற அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள அந்த கிடங்குகளை தரமானதாக மாற்றுவது என்பது ஒரு ரியல் எஸ்டேட் சார்ந்த பணியாக மட்டுமல்லாமல், சிறந்த நிர்வாகம் சார்ந்த பணியாகவும் அமைகிறது. மேலும், இந்த திட்டத்தில் நான் மிகவும் அக்கறை கொள்ளும் பகுதியும் இதுவே ஆகும். உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப இத்தகைய கட்டமைப்புகளை ஏற்கனவே உருவாக்கிய அனுபவம் வாய்ந்தவர்களால் 'வான்ட்ராக்' நிறுவனம் நடத்தப்படுகிறது. வெறும் விளக்கக்காட்சிகளில் மட்டும் விதிமுறைகளை பற்றி பேசாமல், களத்தில் விதிமுறைகளை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இந்த நிறுவனம் விரிவடையும்போது, ​​நிர்வாகக் குழுவிலும், களத்திலும் அந்த தரநிலைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதே தலைவராக எனது முக்கிய நோக்கமாக இருக்கும். இதன் மூலம் இங்கு உருவாக்கப்படும் கட்டமைப்புகள் நம் அனைவரையும் கடந்து நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்,” என்று வான்ட்ராக் நிறுவனத்தின் இயக்குநர் குழுத் தலைவர் திரு. சைலேஷ் வி. ஹரிபக்தி தெரிவித்தார்.

வான்ட்ராக் நிறுவனத்தின் ஒவ்வொரு திட்டமும், கட்டுமானப் பணிகள் தொடங்கியதில் இருந்து 18 முதல் 24 மாதங்களுக்குள் வருவாய் ஈட்டும் நிலையை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கான நிதி, பங்கு மூலதனம் மற்றும் கட்டுமானக் கடன் ஆகியவற்றின் மூலமாகவும், தேவைப்படும் பட்சத்தில் நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் முன்கூட்டிய நிதி மூலமாகவும் திரட்டப்படவுள்ளது. அத்துடன், நில உரிமையாளர்கள் மற்றும் மூலதனப் பங்காளிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சி, கூட்டு மேம்பாடு அல்லது நீண்ட கால குத்தகை மற்றும் முதிர்வு காலம் வரை தக்கவைக்கும் வகையிலான கட்டமைப்புகள் மூலமாகவும் நிதி திரட்டப்படும்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form