நெல்லையில் நடைபெறவுள்ள 5-வது காவேரி மாரத்தான் போட்டியின் ஜெர்சி அறிமுகம்


இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான காவேரி மருத்துவமனை தனது 5-வது காவேரி மாரத்தான் போட்டிக்கான ஜெர்சி மற்றும் பதக்க வடிவங்களை இன்று அறிமுகப்படுத்தியது. 

காவேரி மாரத்தான் அக்டோபர் 4, 2026, ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது. போட்டியாளர் எண் அட்டைகள் (பிப் எண்) இன்று (அக்டோபர் 2) மற்றும் நாளை காலை 10.00 மணி முதல் மாலை 7.30 மணி வரை திருநெல்வேலி வன்னார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வைத்து விநியோகம் செய்யப்படும். 

காவேரி மருத்துவமனை ஆண்டுதோறும் உலக இதய தினத்தை (செப்டம்பர் 29) முன்னிட்டு, இதய ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவற்றின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காவேரி மாரத்தானை நடத்தி வருகிறது. இதில் அனைத்து வயது மற்றும் உடல் தகுதி கொண்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம்.

இந்த மாரத்தான் போட்டியில் 10 கி.மீ  மற்றும் 5 கி.மீ ஓட்டம் ஆகிய இரண்டு பிரிவுகள் இடம்பெறும். இந்த இரண்டு பிரிவுகளிலும் பல்வேறு நிலைகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ₹1,25,000 பரிசுத்தொகை வழங்கப்படும். 


Post a Comment

Previous Post Next Post

Contact Form