சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான ஒன்பிளஸ் அதன் என்6 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஒன்பிளஸ் என்6 லைட் (4GB ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்) மாடலின் விலை ரூ. 16,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சலுகைகளுடன் சேர்த்து ரூ. 16,249* என்ற கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும். ஒன்பிளஸ் என்6 லைட், மிட்நைட் ஹைப், நியோ கிரீன் ஆகிய இரண்டு கண்கவர் வண்ணத் தேர்வுகளில் வெளியாகிறது.
இதன் விற்பனை 22 செப்டம்பர் 2026, மதியம் 12 மணி முதல் ஒன்பிள்ஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், அமேசான்.இன் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் தொடங்குகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளின் ஈஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்கள் ரூ. 750 வரை உடனடித் தள்ளுபடியைப் பெறலாம்; இதன் மூலம் இதன் விலை ரூ. 16,249 ஆகக் குறைகிறது.
ஒன்பிளஸ் என்6 லைட் பிரம்மாண்டமான 7,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ரிவர்ஸ் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களது ஒன்பிளஸ் ஆடியோ சாதனங்கள் உள்ளிட்ட பிற சாதனங்களுக்கு சார்ஜ் பகிர்ந்துகொள்ள முடியும். இது1,600 சார்ஜ் சுழற்சிகளுக்குப் பிறகும் 80 சதிவிதத்துக்கும் அதிகமான செயல்திறனைத் தக்கவைக்கும்.பெரிய 6.75-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே, 120ஹர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், அக்வா டச் தொழில்நுட்பம், ஆட்டோஃபோகஸ் வசதி கொண்ட 13எம்பி முதன்மை கேமராஏஐ கிளியர் ஃபேஸ்', ஏஐ எரேசர் , ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
8.95 மிமீ தடிமனும், சுமார் 215 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது. இந்த வசதியான வடிவமைப்பும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் இராணுவத் தரத்திலான உறுதித்தன்மையும் இணைந்து, தினசரி பயன்பாட்டில் ஏற்படும் சிறு மோதல்கள், கீழே விழுதல்கள் ஆகியவற்றில் இருந்து சாதனத்திற்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கின்றன. ஒன்பிளஸ் என்6 லைட் 36 மாதங்களுக்கு தடையற்ற வேகத்திற்கான உத்தரவாதம், ஆக்டா-கோர் பிராசஸர் ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஒற்றை ஸ்டோரேஜ் வேரியண்ட் 8ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் ஆதரவையும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 2டிபி வரை ஸ்டோரேஜை விரிவுபடுத்தும் வசதியையும் கொண்டுள்ளது.
