தெலங்கானா மற்றும் ஆந்திர பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கமான TAAPMA ஹைதராபாத்தில் சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சியான 'ஹிப்லெக்ஸ் 2026' நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய பிளாஸ்டிக் தொழில்துறை வணிகக் கண்காட்சியாக திகழும் இந்த நிகழ்வு, 2026 ஆகஸ்ட் 7 முதல் 10 வரை ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது.
25,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, தென் மற்றும் மத்திய இந்தியாவின் பாலிமர் மதிப்புச் சங்கிலிக்கான முக்கிய தொழில்துறை தளமாக விளங்குகிறது. மூலப்பொருள் உற்பத்தியாளர்கள், இயந்திர உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப புதுமையாளர்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைத்து, முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
பேக்கேஜிங், ஆட்டோமொபைல், மருத்துவம், உள்கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது. இதில் தானியங்கி இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் செயலாக்க உபகரணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.இதன் முந்தைய பதிப்புகளில் பல நிறுவனங்களுக்கு இடையிலான வணிக ஒப்பந்தங்கள் அதிக அளவில் உருவாகியுள்ளன. இதன் மூலம், தொழில்துறை பரிவர்த்தனைகளுக்கான முக்கிய தளமாக இந்தக் கண்காட்சி உருவெடுத்துள்ளது.சுற்றுச்சூழலுக்கு உகந்த விதிமுறைகள் மற்றும் சுழற்சி பொருளாதாரத்தை முன்னெடுக்கும் தொழில்நுட்பங்களை மையப்படுத்திய சிறப்பு மறுசுழற்சி அரங்கம் இக்கண்காட்சியில் இடம்பெறுகிறது.
நான்கு நாள் கண்காட்சியின் போது செயல்பாட்டு சவால்களை குறைக்கும் வகையில், நேரடி இயந்திர செயல்பாட்டு காட்சிகளுக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாட்டாளர்கள் இலவசமாக வழங்குகின்றனர். பதிவு செய்யப்பட்ட கண்காட்சியாளர்களுக்கு கம்பிரஸ்டு காற்று தண்ணீர் இணைப்பு மற்றும் மின்சார இணைப்பு ஆகியவை செயல்பாட்டு கட்டணமின்றி வழங்கப்படும். இதற்குத் தேவையான அடிப்படை இணைப்புக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
AIPMA-வின் மூத்த துணைத் தலைவர் மற்றும் ஹிப்லெக்ஸ் 2026-ன் விளம்பரக் குழுத் தலைவர் அனில் ரெட்டி வென்னம் கூறுகையில், "நேரடி இயந்திர செயல்பாட்டு காட்சிகளை நடத்துவது, ஒவ்வொரு கண்காட்சியாளருக்கும் மிகப்பெரிய செயல்பாட்டு பொறுப்பாகும். மின்சாரம், கம்பிரஸ்டு காற்று மற்றும் தண்ணீர் இணைப்புகளுக்கான வழக்கமான கண்காட்சி தளச் செலவுகளை நீக்குவதன் மூலம், தொழில்நுட்ப ரீதியிலான தடைகளை நாங்கள் குறைக்கிறோம். இதனால், உற்பத்தியாளர்கள் தங்களது இயந்திரங்களின் நேரடி செயல்திறனையும், நீண்டகால உற்பத்தித் திறனையும் முக்கிய நிறுவன வாங்குநர்களிடம் முழுமையாக வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த முடியும்," என்றார்.
.jpeg)