எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், 2026 ஆம் ஆண்டிற்கான பாரா விளையாட்டு போட்டிகள் பருவத்தில் இந்திய அணியின் 'முதன்மை பங்காளராக' பாராலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா (PCI) உடன் இணைகிறது

இந்தியாவின் மிகவும் நம்பகமான தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், 2026 ஆம் ஆண்டிற்கான பாரா விளையாட்டுப் போட்டிகள் பருவத்திற்கான இந்திய குழுவினரின் 'முதன்மை பங்காளராக'  மாறுகின்ற வகையில், இந்திய பாராலிம்பிக் குழுவுடன் தனது கூட்டாண்மையை வலுப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026 மற்றும் ஜப்பானின் ஐச்சி- நகோயாவில் நடைபெறவிருக்கும்  ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026க்குச் செல்லவிருக்கும் இந்திய பாராலிம்பிக் குழுவினருக்கு இந்நிறுவனம் 'அதிகாரப்பூர்வ ஆயுள் காப்பீட்டு கூட்டாளர்' ஆக செயல்படும்.

இந்தக் கூட்டாண்மையின் வாயிலாக, அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டின் மூலம் சாத்தியங்களைத் தொடர்ந்து மறுவரையறை செய்யும் உயர் செயல்திறன் போட்டியாளர்களாக இந்தியாவின் முதன்மை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் பயணங்களை அங்கீகரித்து முன்னிலைப்படுத்த எஸ்பிஐ லைஃப் நோக்கம் கொண்டுள்ளது.  நம்பிக்கை, தயார் நிலை மற்றும் ஆதரவு ஆகியவற்றின் மூலம் தனிநபர்கள் தொடர்ந்து எல்லைகளைத் தாண்டி விதிவிலக்கான பயணங்களை உருவாக்க முடியும் என்ற பகிரப்பட்ட நம்பிக்கையை இந்த கூட்டாண்மை வலுப்படுத்துகிறது.

இந்த கூட்டாண்மை குறித்து, எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பிராண்ட், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் மற்றும் சிஎஸ்ஆர் தலைவர் ரவீந்திர ஷர்மா கூறும்பொழுது," 2026-ம் ஆண்டு பாரா விளையாட்டு பருவத்திற்கான இந்திய அணியின் முதன்மை கூட்டாளராக  பிசிஐ உடனான எங்களின் கூட்டாண்மையை நாங்கள் வலுப்படுத்தும் வேளையில், உலக மேடையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுடன் நிற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதை ஆதரிப்பதையும் தாண்டி, தனிநபர்களும் குடும்பங்களும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயார்படுத்திக்கொள்ள உதவுவதிலும், இதன் மூலம் தங்களுக்கு மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்த அவர்களை ஊக்குவிப்பதிலும் உள்ள எங்கள் பரந்த அர்ப்பணிப்பை இந்த கூட்டாண்மை பிரதிபலிக்கிறது. "என்றார்.

பாராலிம்பிக்  கமிட்டி ஆஃப் இந்தியா இன் தலைவரும், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் பெற்றவருமான தேவேந்திர ஜஜாரியா கூறும்பொழுது, "2026-ஆம் ஆண்டுக்கான பாரா விளையாட்டுப் போட்டிகள் பருவத்தில் இந்திய அணியின் முதன்மைப் பங்காளராக இணையும் எஸ்பிஐ லைஃப் நிறுவனத்துடனான எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா 29 பதக்கங்களை வென்று வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை அடைந்த கடந்த பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டிகளின் போது  எங்களுடன் இணைந்திருந்த எஸ்பிஐ லைஃப் பாராலிம்பிக் இயக்கத்தில்  தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளோம். எங்கள் மாற்றுத் திறனாளர் விளையாட்டு வீரர்கள் விளையாட்டு சிறப்பில் முழுமையாக கவனம் செலுத்துவதற்கான சூழலமைப்பை உருவாக்குவதில் இத்தகைய பெரு நிறுவனக் கூட்டாண்மைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எங்கள் வீரர்கள் மீதான எஸ்பிஐ லைஃப் நிறுவனத்தின்  உறுதியான நம்பிக்கை, அவர்கள் பெரிய கனவுகளைக் காணவும், உயர்ந்த மட்டத்தில் செயல்படவும், நாட்டை பெருமைப்படுத்தவும் அதிகாரமளிக்கும் ஒரு பகிரப்பட்ட  உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது"என்றார் 

Post a Comment

Previous Post Next Post

Contact Form