கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்‌ஷன் உடன் இணைந்த நடிகர் அக்‌ஷய் குமார்



இந்தியாவின் ஆராய்ச்சி சார்ந்த வேளாண் உள்ளீட்டு நிறுவனங்களில் ஒன்றான கிரிஸ்டல் கிராப் புரொடெக்ஷன் லிமிடெட்  அக்ஷய் குமாரை தனது “பிராண்ட் அம்பாசிடராக” நியமித்துள்ளதாக அறிவித்தது.இந்த இணைவின் ஒரு பகுதியாக, கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்ஷன், “நாட்டின் விவசாயி, நாட்டின் நிஜமான ஹீரோ” எனும் தனது முதல் தேசிய பிராண்ட் கேம்பைனை, அக்ஷய் குமாருடன் இணைந்து அறிமுகப்படுத்தியது.

 இது இந்திய விவசாயிகளின் பங்களிப்பு மற்றும் அவர்களின் அன்றாட துணிச்சலுக்கு செலுத்தும் ஒரு மரியாதையாகும். இந்தக் கூட்டணி, இந்திய விவசாயத்திற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்ஷன் கொண்டுள்ள அர்ப்பணிப்பை, அக்ஷய் குமாருடன் ஒன்றிணைக்கிறது. இந்த கூட்டணி மூலம், இந்திய விவசாயிகளுடனான தனது தொடர்பை மேலும் வலுப்படுத்துவது, மற்றும் அவர்கள் மேம்பட்ட தீர்வுகளைக் கையாண்டு விவசாய லாபத்தை அதிகரிக்க உதவுவதை கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்ஷன் இலக்காகக் கொண்டுள்ளது.

“நாட்டின் விவசாயி, நாட்டின் நிஜமான ஹீரோ” கேம்பைன் தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள் மற்றும் பல்வேறு நேரடி விவசாயி ஈடுபாட்டு தளங்கள் வழியாக கொண்டு செல்லப்படும். விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பாகக் கொண்டாடும் அதே வேளையில், பயிர் பாதுகாப்புத் தீர்வுகள், விதைகள் மற்றும் “கிரிஸ்டல் டாக்டர்”  நெட்வொர்க் மூலம் வழங்கப்படும் விவசாய ஆலோசனை சேவைகள் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு கூட்டாளியாக கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்ஷனின் பணி குறித்தும் இந்தப் பிரச்சாரம் முன்னிலைப்படுத்தும்.

கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்ஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் அங்கூர் அகர்வால் கூறுகையில், "அக்ஷய் குமார் மன உறுதி, ஒழுக்கம் மற்றும் ஆழமான நோக்கத்தை பிரதிபலிக்கிறார். இந்த மதிப்புக் கூறுகள் கிரிஸ்டல் நிறுவனத்தின் கொள்கைகளுடன் வலுவாக ஒத்துப்போகின்றன. ஒரு தேசிய அடையாளத்தை, தேசத்திற்கு உணவளிக்கும் நிஜமான நாயகர்களான நமது விவசாயிகளுடன் இணைப்பதற்கான ஒரு வழியாக இந்த இணைவை நாங்கள் பார்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, விவசாயி என்பவர் வெறும் கூட்டாளர் மட்டுமல்ல, நாங்கள் இருப்பதற்கான மிக முக்கிய காரணமும் அவரே." என்றார். “

சூப்பர் ஸ்டார் மற்றும் கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்ஷனின் பிராண்ட் அம்பாசிடர் அக்ஷய் குமார் கூறுகையில், "கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்ஷனுடனான இந்த இணைப்பு மிகவும் இயல்பான ஒன்று. இந்திய விவசாயிகளுடன் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், செயல்பாட்டிலும் தோளோடு தோள் நிற்கும் ஒரு பிராண்டுடன் இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இந்திய விவசாயிகளைக் கொண்டாடுவோம், தன்னம்பிக்கை மிக்க நவீன விவசாயத்தின் புதிய சகாப்தத்திற்கு ஊக்கமாக இருப்போம்." என்றார். “

கிரிஸ்டல் க்ராப் ப்ரொட்டெக்ஷனின் கிரிஸ்டல் பிராண்ட்ஸ் பிரிவின் தலைமை வணிக அதிகாரி சோஹித் சத்யாவாலி கூறுகையில், "அக்ஷய் குமார் தனது திரைப் பயணத்தில் உண்மைத்தன்மையையும் நம்பகத்தன்மையை எப்போதும் கொண்டு வருபவர். அதே நம்பகத்தன்மையை கிரிஸ்டல் பிராண்டிற்கும் இந்த இணைப்பு கொண்டு வரும். மேம்பட்ட பயிர் தீர்வுகளை வழங்கவும், விவசாயிகள் லாபகரமான விவசாயத்தை உருவாக்க உதவவும் நாங்கள் எடுக்கும் முயற்சிகளை இது வலுப்படுத்தும்." என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form