மான்யவர் மோஹேயின் ‘மேட் ஃபார் ஈச் அதர்’விளம்பரம்



இந்தியாவின் மிகச்சிறந்த திருமண ஃபேஷன் பிராண்டான மான்யவர் மோஹே, தனது புதிய விளம்பரமான ‘மேட் ஃபார் ஈச் அதர்’-க்காக ரஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா ஆகியாரை பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது. இது வெறும் விளம்பரம் மட்டுமல்ல; இது அதிக ஆற்றல் கொண்ட, ஃபேஷன் கலந்த ஒரு இசைச் சித்திரம். ‘விரோஷ்’ இரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஒரு விஷயத்தை இது வழங்குகிறது - இந்த ஜோடியின் இரசிக்கத்தக்க கிண்டல்களையும், மறுக்க முடியாத கெமிஸ்ட்ரியையும் முன் எப்போதும் கண்டிராத வகையில் இது படம்பிடித்து, இறுதியில் அவர்களின் ‘மேட் ஃபார் ஈச் அதர்’ தருணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

ஸ்டைலான, ஒரே மாதிரியான உடைகளை அணியும் திட்டத்துடன் தொடங்கும் இந்தக் காட்சி, உடனடியாக ஒரு காவியமான பாடல் மோதலாக மாறுகிறது. ரஷ்மிகா முதல் கிண்டலைத் தொடங்க, விளையாட்டுத்தனமான ‘நோக்-ஜோக்’ (சிறு சண்டைகள்) வெடிக்கிறது. "ட்வின்னிங் செய்யத் தான் பிளான் செய்தோம், நீ என்ன உடை அணிந்திருக்கிறாய்?" என்று அவர் கேட்க, அதற்கு விஜய் சமமான வசீகரத்துடன், "உன் ஹீரோவின் ஸ்டைல் பிரமாதமாக இருக்கிறது அல்லவா?" என்று பதிலளிக்கிறார்.

இந்தக் கிண்டல்கள் விளையாட்டுத்தனமாக அதிகரித்து, இறுதியில் ஒரு அதிரடியான அறிவிப்பில் முடிகிறது: “இதை நிறுத்துவோம்! நாம் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் இல்லை”. ஒரு ரொமாண்டிக்-காமெடி பாணியில் 'இவர்கள் இணைவார்களா மாட்டார்களா' என்ற பதற்றத்தில் இரசிகர்கள் இருக்கும்போது, இசை மென்மையாகிறது அத்துடன் கதை நெகிழ்ச்சியான ஒன்றாக மாறுகிறது.

விளையாட்டுத்தனமான சீண்டல்களிலிருந்து இதயப்பூர்வமான உரையாடலுக்கு மாறும் அந்தத் தருணம், விஜய்யும் ரஷ்மிகாவும் தங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதுடன், அதே வேறுபாடுகள் எப்படி அவர்களின் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகின்றன என்பதை வெளிப்படுத்தும் விதமாக அழகாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. உண்மையான பந்தம் வேறுபாடுகள் இருந்தபோதிலும் நிலைத்திருப்பதல்ல, மாறாக அந்த வேறுபாடுகளாலேயே செழித்து வளர்கிறது என்பதற்கு இது ஒரு அழுத்தமான சான்றாகும்.

இந்த விளம்பரப்படம் ஒரு மூச்சடைக்கக்கூடிய காட்சி விருந்துடன் நிறைவடைகிறது. இதில் விஜய் ஒரு நேர்த்தியான மான்யவர் இண்டோ-வெஸ்டர்ன் உடையில் காட்சியளிக்க, ரஷ்மிகா ஒரு கண்கவர் மோஹே லெஹங்காவில் ஜொலிக்கிறார். இது இந்த விளம்பரத்தின் மையக் கருத்தான - 'மான்யவர் மோஹே. மேட் ஃபார் ஈச் அதர்' என்பதை மிகச் சரியாகப் பிரதிபலிக்கிறது.

வேதாந்த் ஃபேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் பிரிவு முதன்மை அதிகாரி வேதாந்த் மோடி அவர்கள் இந்த விளப்பரப்படத்தின் நோக்கம் குறித்து விரிவாகக் கூறியதாவது, "மான்யவர் மோஹே-வில், நாங்கள் திருமணங்களுக்கான ஆடைகளை மட்டும் வடிவமைப்பதில்லை; அந்தத் திருமணங்களை அடையாளப்படுத்தும் நினைவுகளின் ஒரு அங்கமாகவே மாறுகிறோம். எங்களின் நுணுக்கமான கைவினைத்திறனைப் போலவே நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதும், வாழ்வின் முக்கியமான தருணங்களில் தவிர்க்க முடியாத பங்காக இருப்பதும் தான் எங்களின் சாராம்சம். நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு ஆடையும், இரண்டு தனித்துவமான ஆளுமைகள் ஒன்றாக இணைவதைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இந்த விளம்பரம் அந்த உணர்வைப் பிரதிபலிக்கிறது. ரஷ்மிகா, விஜய் ஆகியோர், தங்களின் இயல்பான வசீகரம் மற்றும் அனைவராலும் எளிதில் அணுகக்கூடிய தன்மையால், இந்த இசை கலந்த கதையை உயிர்ப்பிக்க சரியான தேர்வாக அமைந்தனர். இந்த விளம்பரத்தின் மூலம், நவீனமாகவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியாவின் கொண்டாட்ட கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய விதத்திலும் திருமண ஆடைகளை நாங்கள் முன்வைக்கிறோம். மான்யவர் மோஹே-வுடன் இணையும் ஒவ்வொரு ஜோடியும் உண்மையிலேயே 'ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்' என்ற எங்கள் நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form