இந்தியாவில் மிகவும் நம்பகமான மேலாண்மை நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான சேவியர் அப்டிடியூட் டெஸ்ட் (எக்ஸ்ஏடி) 2026 இன் பதிவு இறுதி தேதி 5 டிசம்பர் 2025 அன்று நெருங்கி வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் பாடப்பிரிவுகளை தொடர விரும்பும் விண்ணப்பதாரர்கள், கடைசி தேதிக்கு முன் தங்கள் விண்ணப்பங்களை முடித்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எக்ஸ்ஏடி2026க்கான பதிவு 10 ஜூலை 2025 அன்று தொடங்கப்பட்டது, மேலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் ஏற்கெனவே சேர்க்கைக்கான போட்டியில் இணைந்துள்ளனர். கவுன்ட் டவுன் இயக்கத்தில் உள்ள இந்த நிலையில், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தல், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றுதல், தேர்வு நகரங்களைத் தேர்வு செய்தல் மற்றும் கட்டணத்தைச் செலுத்துதல் ஆகியவற்றை கடைசி தேதிக்கு முன்னதாக முடிப்பது மிக முக்கியமாகும்.
பதிவுக்கான கடைசி தேதியை தவறவிட்டால், 4 ஜனவரி 2026 (மாலை 2:00 மணி முதல் 5:00 மணி வரை) நடைபெற உள்ள எக்ஸ்ஏடி தேர்வில் பங்கேற்கும் தகுதியை இழக்க நேரிடும்.
எக்ஸ்ஏடி 2026க்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் காலம் கொண்ட ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டப்படிப்பை பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை எக்ஸ்ஏடி ஆன்லைன் டாட் இன் எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இந்தத் தேர்வு நாடு முழுவதும் பல நகரங்களில் கணினி வழி வடிவில் நடத்தப்படும். தேர்வின் மொத்த காலவரை மூன்று மணி நேரம் ஆகும், என்று எக்ஸ் ஏடி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
