இந்தியாவின் மிகப்பெரிய செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட மின் நிறுவனங்களில் ஒன்றான டாடா பவர் நிதியாண்டு 2026-ன் இரண்டாம் காலாண்டில் டாடா பவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அவற்றின் வரிக்குப் பிந்தைய லாபம் (அனைத்து செலவுகள் மற்றும் வரிகளைச் செலுத்திய பிறகு நிறுவனம் வைத்திருக்கும் பணம்) அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 30, 2025 அன்று முடிவடைந்த இரண்டாம் காலாண்டில் ₹ 1,245 கோடி (ஆண்டுக்கு ஆண்டு 14% வரை அதிகம்) வரிக்குப் பிந்தைய நிகர லாபம் (PAT) குறித்து அறிவித்தது. இந்நிறுவனத்தின் வருவாய் ₹ 15,769 கோடியாக (ஆண்டுக்கு ஆண்டு 3% வரை அதிகம்) உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில் Q2 FY26.-ல் EBITDA, ₹ 4,032 கோடியாக (ஆண்டுக்கு ஆண்டு 6% வரை அதிகம்) வளர்ச்சிக் கண்டிருக்கிறது.
H1FY26ல், நிகர லாபம் 10% வளர்ச்சியடைந்து ₹ 2,508 கோடியாக பதிவாகியது. வருவாய் 4% உயர்வடைந்து ₹ 33,233 கோடியாக அதிகரித்துள்ளது, EBITDA 11% -க்கு வளர்ச்சிக் கண்டு ₹ 7,961 கோடியாகவும் இருந்தது.
டாடா பவர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் பிரவீர் சின்ஹா [Dr Praveer Sinha, CEO and Managing Director, Tata Power] கூறுகையில், "டாடா பவர், Q2FY26 மற்றும் H1FY26 ஆகிய இரண்டிலும் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது, இது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மற்றும் பல்வகைப்படுத்தப்பட்ட வணிக மாதிரியை நோக்கி எடுக்கப்பட்ட உத்திரீதியிலான செயல்பாடுகள் மற்றும் முடிவுகளின் வலிமையைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. பாரம்பரிய மின் உற்பத்தி, தூய்மையான எரிசக்தி மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட விநியோகம் ஆகிய பிரிவுகள் முழுவதிலும் வளர்ச்சி தொடர்கிறது.’’ என்றார்.
10 ஜிகாவாட் (GW) தூய்மையான திறன் கட்டுமான நிலையில் உள்ளது. இதில் 5 ஜிகாவாட் ஹைப்ரிட் மற்றும் எஃப்.டி.ஆர்.இ (FDRE)திட்டங்களும் அடங்கும். இதன் மூலம் டாடா பவர் தனது வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்திற்கு விரிவாக்கம் செய்யும் நிலையில் உள்ளது. நிறுவனத்தின் பின்னோக்கி ஒருங்கிணைக்கப்பட்ட சூரியசக்தி உற்பத்தி மையங்கள் [backward-integrated solar manufacturing facilities] முழு திறனுடன் செயல்படுகின்றன, ஏ.எல்.எம்.எம் (ALMM) பட்டியலில் உள்ள மாட்யூல்கள் மற்றும் செல்கள் "மேக் இன் இந்தியா" தூய்மையான எரிசக்தி உற்பத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூரைமேல் நிறுவப்படும் சூரிய மின்சக்தி பிரிவான ரூஃப்டாப் சோலார், சாதனை படைக்கும் அளவில் நிறுவப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இத்துறையை மேலும் வளர்ச்சிப்பாதையை நோக்கி முன்னெடுத்து வருகிறது. அதே நேரத்தில் எங்கள் மின் விநியோக நிறுவனங்கள் (Discoms) 13 மில்லியனுக்கும் அதிகமான, வேகமாக வளர்ச்சிக் கண்டு வரும் வாடிக்கையாளர் தளத்தில் சிறப்பான சேவைகளை அளித்து வருகின்றன. மின்சாரச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுடன், டாடா பவர் 2030-க்குள் 40 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு தனது விநியோகச் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு ஏற்ற வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.. இந்தியாவின் மின் துறை மிக வேகம வளர்ச்சிக் கண்டு வரும் போது, டாடா பவர், புதுமை, சுற்றுசூழலுக்கான நிலைத்தன்மை மற்றும் மதிப்புச் சங்கிலி முழுவதும் எரிசக்தி தன்னிறைவுக்கான உறுதிப்பாட்டுடன் இருக்கும்."