'பசியில்லா உலகம்' திட்டத்தை உலகளவில் விரிவுபடுத்துகிறது மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்



உலகின் ஐந்தாவது பெரிய நகை சில்லறை விற்பனை நிறுவனம் மற்றும் இந்தியாவின் முதன்மை பெருநிறுவன சமூக பொறுப்பு முன்மாதிரிகளில் ஒன்றாகவும் விளங்குகிற மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்,  இப்போது, அதன் முதன்மை முயற்சியான 'பசியில்லா உலகம்' திட்டத்தை எத்தியோப்பியாவுக்கு விரிவுபடுத்தியுள்ளதை இன்று அறிவித்தது. இந்தியா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய அதன் வெற்றியைத் தொடர்ந்து, இந்த முயற்சி இப்போது ஆப்பிரிக்க கண்டத்தில் அதன் அடுத்த வளர்ச்சிக்கட்டத்திற்குள் நகர்ந்துள்ளது.  

இந்தியா்களின் கருணை மற்றும் கூட்டு வளா்ச்சியின் அறநெறியில் வேரூன்றிய, பசி இல்லாத உலகம் என்ற இந்த மாதிரி, இந்திய நிறுவனங்கள் எவ்வாறு உள்நாட்டு வெற்றியில் இருந்து உலகளாவிய தாக்கத்தை உருவாக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. மலபார் நிறுவனம் அதன் நிகர லாபத்தில் 5%-க்கும் அதிகமாக, இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்ட சிஎஸ்ஆர் ஒதுக்கீட்டை விட இருமடங்கிற்கும் அதிகமாக, தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், பெருநிறுவன சமூகப் பொறுப்பின் அளவையும், நேர்மையையும் மறுவரையறை செய்கிறது. இது, பசி மற்றும் கல்வி சமத்துவமின்மைக்கு எதிரான ஒரு உலகளாவிய இயக்கமாக,  அதன் நிரூபிக்கப்பட்ட  இந்தியா அடிப்படையிலான கட்டமைப்பை மாற்றுகிறது.

துபாய் கோல்ட் சவுக் இல் உள்ள மலபார் இன்டர்நேஷனல் ஹப் இல் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, மலபார் குழுமத்தின் துணைத் தலைவர் அப்துல் சலாம் கேபி., துபாயில் உள்ள எத்தியோப்பியாவின் தூதர் மேன்மை தாங்கிய அஸ்மெலாஷ் பெக்கலே அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக விருப்பக் கடிதத்தை வழங்கினார். இந்த விழாவில் மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் நிர்வாகக் குழுவின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த  பசியில்லா உலகம் திட்டம் மலபார் கோல்ட் & டயமண்ட்ஸ் நிறுவனத்தின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் இஎஸ்ஜி (சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை) முயற்சிகளில் ஒன்றாகும். தற்போது உலகளவில் 119 இடங்களில் தினமும் 115,000 க்கும் மேற்பட்டவர்களுக்கான உணவை  இத்திட்டம்  வழங்கி வருகிறது. மே 2024 முதல் மூன்று பள்ளிகளில் 900,000 க்கும் மேற்பட்ட உணவுகளை வழங்கிய சாம்பியாவில் இத்திட்டம் கண்ட வெற்றிக்கு அடுத்தப்படியாக, இப்போது எத்தியோப்பியாவிலும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது.

"பசி இல்லாத உலகம்  திட்டம், மலபார் குடும்பத்தால் வழிநடத்தப்பட்ட மிகவும் அர்த்தமுள்ள இஎஸ்ஜி முன்முயற்சிகளாக இருந்து வருகிறது. ஒரு பொறுப்பான நகை நிறுவனமாக, நாங்கள் பணியாற்றும் சமூகங்களுக்கான எங்களின் உறுதிப்பாடு, வணிகத்தை விட அதிகமானது. இந்த திட்டத்தின் மூலம் நேர்மறையான விளைவை ஏற்படுத்திய லட்சக்கணக்கான வாழ்க்கைகள், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான எங்கள் தொலைநோக்கிற்கு ஒரு சான்றாக நிற்கின்றன. எத்தியோப்பியா அரசாங்கத்துடன் இணைவதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள், 10,000 குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்குவது மற்றும் கல்வி சிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்வது ஆகியவற்றுக்கான ஒரு இலக்குடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8,64,000 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக நாங்கள் முதலீடு செய்ய உள்ளோம்."என்று மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அஹம்மத் கருத்து தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form