டாடா பிளே அதன் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் போர்ட்ஃபோலியோவை டாடா பிளே ‘தமிழ் டிவி’-ஐ அறிமுகம் செய்வதன் மூலம் விரிவுபடுத்துகிறது - இந்த பிரத்தியேகமான விளம்பரமில்லாத சேவையில் ஸ்டார் விஜய் சேனலிலிருந்து நீங்கள் பெரிதும் விரும்பிய சில நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். 24x7 எப்போதும் கிடைக்கும் இந்த சேனலில் குடும்ப நாடகங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் புராண இதிகாசங்கள் என அனைத்து தலைமுறை நேயர்களும் ரசிக்கும் வகையில் பிரத்தியேகமாக தேர்வு செய்து தொகுக்கப்பட்டுள்ளன. டாடா பிளேவில் ‘தமிழ் டிவி’ 23 ஜூன் 2026 முதல் சர்வீஸ் எண் #1509-இல் ஒரு நாளைக்கு 2 ரூபாய் என்கிற கட்டணத்தில் கிடைக்கும்.
டாடா பிளேவின் ‘தமிழ் டிவி’ பல்வேறு காலகட்டத்தில் வெளியாக மக்களின் மனம் கவர்ந்த எண்ணற்ற பிரபலமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுத்து விரிவான பட்டியலாக எளிதாக அணுகும் வகையில், விளம்பரமில்லாமல் தடையின்றி வழங்குவதன் மூலம் இந்தத் தேவையை டாடா பிளே நிரப்புகிறது. இந்த சேவையில் ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, ஈரமன ரோஜாவே, சின்னத்தம்பி மற்றும் மௌனராகம் உள்ளிட்ட பிரபலமான குடும்ப நாடகங்கள், கலக்க போவது யாரு சீசன் 5 & 6 ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சி, புராண தொடர்களில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி இதிகாசம் மகாபாரதம் ஆகியவை இடம்பெறும். இதன் அசல் பதிப்பு இந்தி ஜிஇசி-யில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது தமிழிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாடா பிளே நிறுவனத்தின் தலைமை கமர்ஷியல் மற்றும் கான்டென்ட் அலுவலர் பல்லவி பூரி கூறுகையில், “இந்தியப் பொழுதுபோக்குத் துறையில் மறக்கமுடியாத நிறைய கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தமிழ் தொலைக்காட்சி உலகம் நேயர்களுக்கு வழங்கியுள்ளது. டாடா பிளேவின் ‘தமிழ் டிவி’ மூலம், குடும்பங்கள் ஒன்றாக கண்டு மகிழ்ந்த தருணங்களை மீண்டும் உருவாக்கவுள்ளோம். அதேநேரத்தில், பிரபலமான நிகழ்ச்சிகளை மீண்டும் ரசிப்பதற்கு ஒரு விளம்பரமில்லாத தளத்தையும் நாங்கள் நேயர்களுக்கு வழங்குகிறோம்” என்றார்.
இதுகுறித்து பேசிய ஜியோஸ்டார் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “டாடா பிளே உடன் இனைந்து நமக்கு மிகவும் பிரியமான மற்றும் புகழ்பெற்ற சில தமிழ் நிகழ்ச்சிகளை நேயர்களுக்காக மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். காலத்தால் அழியாத இந்த நிகழ்ச்சிகள் தலைமுறை தலைமுறையாக மக்களிடம் ஒரு ஆழமான உணர்வின் பிணைப்பை உருவாக்கியுள்ளன; மேலும் அவற்றை மீண்டும் ஒளிபரப்புவதன் மூலம், நேயர்களுக்கு இந்த கிளாசிக் படைப்புகளை புதிய தலைமுறைக்கு நம்மால் அறிமுகம் செய்ய முடிகிறது” என்றார்.
.jpeg)